அ.தி.மு.க.வில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து

அ.தி.மு.க.வில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.

Update: 2020-05-19 13:11 GMT
சென்னை,

அ.தி.மு.க.வின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.  இதன்படி, ஒன்றிய அமைப்புகளின் கீழ் செயல்படும் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன.

இதுவரை ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதேபோன்று அ.தி.மு.க.வில் தொழில் நுட்ப பிரிவும் சென்னை, கோவை, மதுரை மற்றும் வேலூர் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்