சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை - ராதாகிருஷ்ணன்
சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை. நோய் தொற்று உள்ளவரை தொடுவதால் வாய், மூக்கு வழியாக பரவுகிறது.
கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலம். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முகக்கவசம் கட்டாயம், கை கழுவ வேண்டும்.
பகுதி வாரியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட நோய் அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.