தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-15 06:09 GMT
சென்னை,

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.  புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்