தமிழகத்தில் கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

சென்னையில் இன்று 380- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-13 16:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.  

சென்னையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் தலா 25 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் 23- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்