செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-11 10:59 GMT
சென்னை,

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.  நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொறு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 267 ஆக இருந்தது.  

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருமே   கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரங்கிமலை 44 , கூடுவாஞ்சேரி 23, கேளம்பாக்கம்-6, அச்சிறுப்பாக்கம் -4, செங்கல்பட்டு -3 பேர் உட்பட 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்