சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
சென்னையில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒருநாளில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3043 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.