எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-06 14:48 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சென்னையில் இன்று மட்டும் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இன்று  188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் இதுவரை 222 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூரில் 95 பேருக்கும்  காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் 34 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்