தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலால், தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
நேற்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 76 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.