தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-05-03 13:33 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவு காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில்  கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கோயம்பேடு சந்தை மூலமாக ஏற்பட்ட கொரோனா தொற்றால் சென்னையை தவிர பல்வேறு மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. 

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில்  இன்று கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 1458- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  30 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1379 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்