மே.3- ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல்
மே 3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் வல்லுனர் குழு சமர்பித்தது.
சென்னை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு, அதற்கு பிறகும் நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்த்தப்படுமா? என்பது பற்றி இன்னும் மத்திய மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், மே 3 ஆம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றிய இடைக்கால அறிக்கை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது.