சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம்- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2020-04-13 15:50 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, சென்னையில் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், சென்னையில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தில் செல்வோர் முகக்கவசம் அணியாமல் சென்றால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் . மேலும் வெளியே செல்வதற்கான சிறப்பு அனுமதி சீட்டு போன்றவை ரத்து செய்யப்படும்” என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்