ஆவின் பால் அட்டைகள் விற்க சிறப்பு ஏற்பாடு

ஆவின் பால் அட்டைகள் விற்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-06 20:04 GMT
சென்னை, 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின்(ஆவின்) மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிப்பது குறித்தும், புதிய அட்டைகளை பெற்றுக்கொள்வது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை நுகர்வோர் எழுப்பி வருகிறார்கள். சென்னை மாநகரில் உள்ள அனைத்து வட்டார அலுவலகங்களிலும், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களிலும் 15-ந் தேதி வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பால் அட்டைகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நேரடி பால் வினியோக மையங்களில் காலை 5 மணி முதல் 7 மணி வரை பால் அட்டைகள் விற்பனை செய்யப்படும்.

புதிய மாதாந்திர பால் அட்டைகள் தேவைப்படுவோர் aav-i-n-m-i-lk.com என்ற இணையதளத்தில் தேவைப்படும் விவரங்களை சமர்ப்பித்து புதிய அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். சென்னை மாநகரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் சங்கம், குடியிருப்போர் சங்கம், தங்கள் உறுப்பினர்களின் அட்டைகளை புதுப்பித்தல் விவரங்கள் மற்றும் அதற்குரிய பணத்தை மொத்தமாக சேர்த்து வைத்து விட்டு 18004253300 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு தகவல் தெரிவித்தால் ஆவினில் இருந்து நேரடியாக வந்து பணத்தை பெற்றுக் கொண்டு கார்டுகள் புதுப்பித்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்