டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனை செய்வதில் தவறில்லை - சரத்குமார் அறிவுறுத்தல்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பரிசோதனை செய்வதில் தவறில்லை என்று சரத்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2020-04-01 21:30 GMT
சென்னை, 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமே ஒருசேர சந்தித்து வரும் இக்கடினமான சூழ்நிலையில், நாட்டிற்கு ஒற்றுமை மிக அவசியம். ஏழை, பணக்காரன், ஜாதி, மத, மொழிகளை கடந்து ஒற்றுமையை பிரதிபலிக்கும் பிரதான வைரசாக கொரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று உணர்த்தியிருக்கிறது. எனவே, சகோதரத்துவம், மனிதநேயத்துடன் ஒற்றுமையாக ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது.

டெல்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவோம். வைரஸ் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத சூழல். எதிர்பாராத விதமாக தொற்று இருந்தால், அது மற்றவர்களுக்கு பரவும். எனவே அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து குணப்படுத்தவும், குடும்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும், சமூகத்தினருக்கும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பரிசோதித்து கொள்வதில் தவறில்லை. பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்