சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு வைரஸ் தொற்று இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவு

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-03-10 16:59 GMT
சென்னை,

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

இதனிடையே கொரோனா அறிகுறியுடன் வந்தவர்கள் மற்றும் கொரோனா பாதித்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு வைரஸ் தொற்று இல்லை என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “எங்கள் மாநிலத்திற்கு ஒரு நல்ல செய்தி. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார். ரத்த மாதிரியை அவருக்கு மீண்டும் பரிசோதித்ததில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது; அரசு சார்பில் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டதால்  குணமடைந்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு என்பது கொரோனா இல்லா மாநிலம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்