சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அனைத்து பெண்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-08 07:29 GMT
சென்னை,

உலகின் ஆக்கும் சக்தியான பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்!

"இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்!

பெண்ணே வாழ்க!

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்