கொரோனா வைரசுக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து பெருமை சேர்க்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரசுக்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்து உள்ளார்.

Update: 2020-03-03 07:09 GMT
சென்னை

உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  உலகம் முழுவதும்  அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து மருத்துவர்கள் தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் செய்திகள்