ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை வாபஸ் என தகவல்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
சென்னை,
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் சிறப்பு பாதுகாப்பு படையின் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மத்திய உள்துறை அமைச்சகம், கேபினட் செயலகம் மற்றும் உளவுத்துறை ஆகியவை ஈடுபட்டது.
மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு விளக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.
இதற்கு மாற்றாக, இதற்கு இணையான தமிழக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. இதுவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்பு படை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.