6:00 மணி நிலவரம்: 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு

உள்ளாட்சி தேர்தலில் 73 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு பெற்றார்.

Update: 2020-01-02 12:42 GMT

பதவிகள்

அ.தி.மு.ககூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

122

143

0

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

551

713

47

 
ஆதாரம்:தந்தி டிவி

சென்னை,

* நாகை:  சீர்காழி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சி மன்ற தலைவராக அலெக்ஸாண்டர் வெற்றி

* நாகை: சீர்காழி ஒன்றியம் பெருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக சுகமதிமுருகன் வெற்றி 

* தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சிவகாமிசுந்தரி வெற்றி.

* தூத்துக்குடி: சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சி மன்ற தலைவராக அழகேசன் வெற்றி.

*  ராமநாதபுரம் மாவட்டம் ஏ.தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட தங்கவேலு என்ற  73 வயது மூதாட்டி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை 60 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

* நாமக்கல்: நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார்.

* கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக கார்த்திகேஸ்வரி வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்