உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் -அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த அலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான்.
எப்பாடுபட்டாவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும்” என்று கூறினார்.