சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த அலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.