தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-12-01 11:52 GMT
சென்னை,

தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரெஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் இடையே,  சென்னையில்  எழும்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சேலம் மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது.

கடலூர்: மேலகொளக்குடி கிராமத்தில் பரவணாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மேட்டு தெரு என்ற பகுதியில் 100 பேர் சிக்கியுள்ளனர்.  அவர்களை மீட்கும் பணியில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்: ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிபேட்டை, பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருகிறது.

திருப்பூர்: மழை மறைவு மாவட்டமான திருப்பூரில் நேற்று (நவ.,30) பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

மேலும் செய்திகள்