உலக கோப்பை துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக கோப்பை துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு, மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தங்கமங்கையின் வெற்றி தமிழகத்திற்கும், இந்திய திருநாட்டிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்துள்ளது’ என்றார்.