தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.
கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து பணி மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டும் திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன. மக்கள் இயக்கமாக உருவாக்கி, குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம் என கூறினார்.