சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு
11ஆம் தேதி சென்னை வரும் சீன அதிபருக்கு 35 இடங்களில் வரவேற்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை,
11ஆம் தேதி பிற்பகல் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரவேற்கிறார்.
விமான நிலையத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளோடு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை வியக்கத்தக்க வகையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த வழிகளில் எல்லாம் மூவர்ண கொடியை ஏந்திய படி பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிமுகவினர் என 6 ஆயிரத்து 800 பேர் வரவேற்பு கொடுக்க உள்ளனர்.
பின்னர் சோழா ஓட்டல் வாசலில் வாழை மற்றும் கரும்புகளால் வளைவுகள் அமைக்கப்பட்டு அங்கு நாதஸ்வர இசையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம், டிரம்ஸ் வாத்தியம், காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஒயிலாட்டம், மத்திய கைலாஷ் அருகே மதுரை கரகாட்ட குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
திருவான்மியூர் சிக்னலில் செண்டை மேள வரவேற்பு
கந்தன்சாவடியில் பாண்டு வாத்திய குழுவினரின் நிகழ்ச்சி,
திருவிடந்தையில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம்
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள்
ஐந்து ரத சாலைகளில் காய்கறிகளால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகிறது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சுமார் 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு அளிக்கப்படும் இந்த வரவேற்பில் சுமார் 49 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.