காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு - துரைமுருகன்

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-07 10:14 GMT
சென்னை,

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்ற கர்நாடகாவின் கடிதம் குறித்து தமிழக அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும். 

காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையில் திமுக ஒன்றும் செய்யவில்லை என முதலமைச்சர் கூறுவது தவறு. காவிரி நடுவர் மன்றம் அமைத்தது முதல், இடைக்கால தீர்ப்பு கோரியது வரை திமுக தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்