நீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னையில் ரூ.348 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை,
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் கொடுங்கையூரில் ரூ.348 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் அனைவரையும் வரவேற்றார். அரசு தலைமை செயலாளர் க.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார்.
விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, அதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீரை பெற இருக்கும் 9 தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சென்னை பெருநகர் பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று சேவைகளை இவ்வாரியம் சிறப்பாக செய்து வருகிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சென்னைக் குடிநீர் வாரியமும், பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதா? என கட்டமைப்புகளை பரிசோதித்து, அவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், தேவைப்பட்டால் மேம்படுத்தவும் அல்லது விரிவாக்கம் செய்யவும், நுகர்வோர்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறது. இதனால் தற்பொழுது பெய்த மழைக்கு பிறகு, சென்னை மாநகரில் நிலத்தடி நீர்மட்டம் 2 முதல் 5 அடிவரை உயர்ந்துள்ளது.
சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரத்திற்கு ஓர் நிரந்தர தீர்வாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் ரூ.6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீர் கடலில் கலந்து வீணாவதை தவிர்க்கும் பொருட்டும், மழைநீரை சேமித்து சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் பொருட்டும் கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை என்ற இடத்தில் வருடத்திற்கு 1,000 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரை சேமிக்கும் வகையில் நீர்தேக்கத்தை அமைக்கும் பணி அ.தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
வடசென்னை பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க, கொடுங்கையூரில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கோயம்பேடு பகுதியில் மேலும் ஒரு 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் வடசென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலை தேவைகளுக்கு தினசரி 40 மில்லியன் லிட்டர் நன்னீருக்குப் பதிலாக கழிவுநீரை சுத்திகரித்து வழங்கப்பட உள்ளது. இவ்விரு நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரும்பொழுது, சென்னை மாநகரில் மொத்தமாக உருவாகும் கழிவுநீரில் 20 சதவீதம் அளவிற்கு மறு சுழற்சி செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
கொடுங்கையூரில் நேற்று திறக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால், தினமும் 45.70 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மணலி, மீஞ்சூர், காட்டுப்பள்ளியில் உள்ள 9 தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதனால், இந்த தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த 45.70 மில்லியன் லிட்டர் குடிநீர் மிச்சமாகும். அந்த தண்ணீர் கூடுதலாக சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படும். இந்தியாவிலேயே கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு 45.70 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இதே தொழில்நுட்பத்தில் அ.தி.மு.க. அரசு நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் நாளொன்றுக்கு தலா 10 மில்லியன் லிட்டர் இரண்டாம் நிலை கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கும் நிலையங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு, அ.தி.மு.க. அரசு இப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகிறது. இனி புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுகின்றபோது நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலையத்தினை உருவாக்கினால்தான் அனுமதியே வழங்கப்படும் என்ற ஒரு விதி விரைவில் உருவாக்கப்பட உள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நன்னீரைப் பாதுகாக்கும் பொருட்டு, கழிவுநீரை சுத்திகரித்துப் பயன்படுத்துவதற்கான இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
எனது சீரிய முயற்சியால் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய, கண்டலேறு அணை 25-9-2019 அன்று திறக்கப்பட்டது. தற்போது இந்த நீர், பூண்டி நீர்தேக்கத்தை வந்தடைந்துள்ளது. எனவே, சென்னை நகர மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.
கிருஷ்ணா நதியிலிருந்து வருகின்ற நீர் பல இடங்களில் வீணாகிறது. ஆகவே, கண்டலேறுவில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு வருவதற்கு அரசே இன்றைக்கு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது. கண்டலேறுவில் இருந்து குழாய் மூலமாக பூண்டிக்கு தண்ணீரைக் கொண்டு வருகின்ற பொழுது, கண்டலேறு ஏரியில் இருந்து திறக்கப்படுகின்ற நீர் எவ்வித சேதாரமும் இல்லாமல் முழுமையாக பூண்டி ஏரிக்கு வந்தடையும். அவ்வாறு வந்தடைகின்றபொழுது நமக்கு முழுமையாக நீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசினுடைய பரிசீலனையில் இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.