இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவித்து பெருமைப்படுத்துங்கள். தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும், தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சயமாக இருக்கிறது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.