இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால்: ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை குறைந்தது - பவுனுக்கு ரூ.664 சரிந்து, ரூ.29,264-க்கு விற்பனை
இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்தது. பவுனுக்கு ரூ.664 சரிந்து, ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 264-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,
தங்கம் விலை கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.640 அதிகரித்தது. அதன் பின்னரும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே தான் சென்றது. கடந்த மாதம் 29-ந் தேதி பவுனுக்கு ரூ.240 குறைந்து, அதற்கு மறுநாளே மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.
கடந்த 4-ந் தேதி காலையில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி, மாலையில் சற்று குறைந்தது. இருப்பினும் முந்தைய நாளைவிட விலை அதிகரித்து தான் இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 741-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928-க்கும் விற்பனை ஆனது.
நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.83-ம், பவுனுக்கு ரூ.664-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 658-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 264-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு பிறகு தங்கம் விலை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை குறைவுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, ‘உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதேபோல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் தான் தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருக்கிறது. இன்னும் 2 நாட்களுக்கு இதேநிலை தான் நீடிக்கும். அடுத்த வாரத்தில் மீண்டும் உயர வாய்ப்புள்ளது’ என்றார்.
வெள்ளி விலையும் நேற்று பெருமளவில் குறைந்தது. கிராமுக்கு 3 ரூபாய் 50 காசும், கிலோவுக்கு ரூ.3 ஆயிரத்து 500-ம் குறைந்து, ஒரு கிராம் 51 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 300-க்கும் விற்பனை ஆனது.