தமிழகம்-புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2019-09-06 11:14 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-

ஒடிசா கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்  மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் பகுதிகளில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசையும் ஒட்டி வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்