நடிகை மதுமிதா போலீசில் பரபரப்பு புகார்

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் அரங்கம் அமைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Update: 2019-09-04 23:24 GMT
பூந்தமல்லி, 

நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் மதுமிதா தரப்பில் நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில்,‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோது, தான் அதிக மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக அப்போட்டியில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். தன்னைப்பற்றி தவறான கருத்துகளையும், விமர்சனங்களையும் வெளியிடக்கூடாது என்றும், இது தொடர்பாக விசாரித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு சம்பந்தமாக நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை செய்து வருகின்றார்.

மேலும் செய்திகள்