சவுதி அரேபிய அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சு பணிகள்: 11-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிவதற்கு 3 ஆண்டு பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., பி.எச்டி. தேர்ச்சி பெற்ற பெண் நர்சுகளுக்கான நேர்முகத் தேர்வு வருகிற 24, 25-ந் தேதிகளில் மும்பையிலும், 27, 28, 29-ந் தேதிகளில் டெல்லியிலும், அக்டோபர் 1, 2-ந்தேதிகளில் சென்னையிலும், அக்டோபர் 4, 5-ந் தேதிகளில் கொச்சியிலும் நடைபெற உள்ளது.
தகுதி உள்ள நர்சுகள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், வெள்ளைநிறப்பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ov-e-m-c-l-m-o-hsa2018@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 11-ந்தேதிக்குள் அனுப்பலாம்.
ஊதியம் மற்றும் பணி விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.