வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் விலை 16 ரூபாய் உயர்ந்தது
வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் விலை 16 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னை,
சமையல் கியாஸ் விலை, மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை, 16 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.590.50 ஆக இருந்த சிலிண்டர் விலை, ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.
இதுபோல், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை ரூ.1,123-ல் இருந்து ரூ.1,174 ஆக உயர்ந்துள்ளது.