திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்தார்.

Update: 2019-09-02 11:02 GMT
சென்னை,

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி- செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்திக்கு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. 

இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில், துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்