இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 500 கிலோ கடல் அட்டைகளை தமிழக கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-09-01 13:23 GMT
சென்னை,

ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடலில் இருந்து பிடித்து வரப்பட்ட கடல் அட்டைகளை, தமிழக கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மண்டபம் துறைமுக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக வந்த படகை நிறுத்தி கடலோர காவல் குழும போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது படகில் உயிருடன் சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவலர்கள், அட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, படகில் இருந்த இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்