தமிழக அமைச்சரவையில் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம்

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2019-08-07 16:47 GMT
சென்னை,

தமிழக அமைச்சரவையில் இருந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கம் செய்து  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

மணிகண்டன் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முதன் முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விமர்சித்து பேட்டி அளித்திருந்தநிலையில் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்