இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் ஐ.டி.ஐ. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் ஐ.டி.ஐ. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2019-08-03 22:45 GMT
சென்னை,

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37 ஆயிரத்து 97 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதல்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது.

இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7,840 இடங்களும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்ப 2-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20-ந் தேதியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்