சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பிறப்பு-இறப்பு சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம்

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

Update: 2019-08-03 19:24 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்