தமிழில் அறிவியல் எழுதப்பட்டால்: தமிழை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும்- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
‘தமிழில் அறிவியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத்தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்தார்.
சென்னை,
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரசார் என்ற அறிவியல் வளர்ச்சி நிறுவனமும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து ‘தமிழில் அறிவியல்’ என்ற தலைப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கருத்தரங்கம் நேற்று நடத்தியது.
இந்த கருத்தரங்கை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத்தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்தார். இதில் விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் இயக்குனர் நகுல் பராசர், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர்-பொறுப்பு எஸ்.சவுந்தரராஜ பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-
கல்விக்கு இலக்கணம் வகுத்து இருக்கும் தமிழை கற்கக்கூடாது என கூற யாருக்கும் தகுதியில்லை. அறிவியலை நாம் தாய்மொழியில் கற்கும் போது தாய்மொழியான தமிழ் சான்றோர் அவையில் பேசப்படும். இன்றைய காலகட்டத்தில் தமிழ், அறிவியலையும் தாண்டி செல்கிறது. தமிழில் படித்து தான் முன்னிலைக்கு வந்துள்ளோம். நம்முடைய உரிமைகளை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழில் அறிவியலை எழுதினால் தமிழை அடுத்தக்கட்டத்துக்கு நாம் எடுத்துச்செல்லமுடியும். தமிழ் அறிஞர்கள் அடுத்தக்கட்டத்துக்கு தமிழை எடுத்துச்செல்ல தயாராக உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கருத்தரங்கம் நடைபெறுகிறது.