15 வயது சிறுமி 5 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: தாய் புகார்
சென்னையில் 15 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை புளியந்தோப்பில் 15 வயது சிறுமி தாயிடம் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி நிஷா என்பவரது வீட்டில் தங்கியிருந்த போது 5 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.
தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஜெபினா, மொபினா, நிஷா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.