மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தவர்கள் சேருவதா? சமூக வலைதளத்தில் வெளியான புகாரால் பரபரப்பு
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
சென்னை,
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அல்லது 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மாணவ-மாணவிகளின் பெற்றோர் அந்த மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளின் அடிப்படையில் தான் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் மாநிலத்திலும், தமிழகத்திலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு முயற்சிப்பதாக புகார் வெளியானது.
இதுகுறித்த தகவலை மருத்துவ கல்வி இயக்குனர், தேர்வுக்குழு செயலாளர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்துக்கு சென்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷிடம் தெரிவித்ததாகவும், அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகாரால் நேற்று மருத்துவ கலந்தாய்வு நடைபெற்ற அரங்கிலும் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்ககத்திடம் கேட்டபோது, அதுபோல் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இருந்தபோதிலும், சில பெற்றோர் மருத்துவ கல்வி இயக்ககத்திலும், கலந்தாய்வு நடத்தும் தேர்வுக்குழுவிடமும் இதுபற்றி முறையாக விசாரித்து கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
இதுதொடர்பாக சட்டசபையில் தி.மு.க. சார்பில் இன்று (புதன்கிழமை) கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.