வாரிசு அரசியல் செய்வது யார்? சட்டசபையில் விவாதம்
சட்டசபையில் சட்டத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சு.ரவி பேசினார்.
சென்னை,
அவர் பேசும்போது, மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்லுவார்... என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாடினார். மேலும் அவர், சில கட்சியில் தந்தை, மகன், பேரன் என்று வாரிசு அரசியல் வந்து விட்டது என்று குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இந்த நேரத்தில் தி.மு.க. கொறடா சக்கரபாணி பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
சக்கரபாணி (தி.மு.க.):- துணை முதல்-அமைச்சர் மகன் எம்.பி.யாக இருக்கிறார். ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் போட்டியிட்டார், அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் எம்.பி.யாக இருந்தார். ஆனால் கட்சி நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டு, கட்சிக்கு உழைத்த பிறகு தான் அவர் (உதயநிதி ஸ்டாலின்) பொறுப்புக்கு வந்திருக்கிறார். எனவே எது வாரிசு அரசியல் என்பது மக்களுக்கு தெரியும்.
அமைச்சர் தங்கமணி:- உறுப்பினர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. பொதுவாக தான் குறிப்பிட்டார். அவர் பேசியது உங்களை (தி.மு.க.) என்று ஏன் நினைத்துக்கொள்கிறீர்கள்.
சபாநாயகர்:- அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நீங்களாவது கற்பனை செய்து கொண்டால் நான் என்ன செய்வது? இத்துடன் பிரச்சினையை முடியுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.