மதுபானம், பெட்ரோல்-டீசல் வரி மூலம் ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் வணிக வரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

மதுபானம், பெட்ரோல்-டீசல் மீதான வரி மூலம் தமிழக அரசுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-09 20:30 GMT
சென்னை,

தமிழக அரசுக்கு மதுபான விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ.31 ஆயிரத்து 157 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மதுபானங்கள் மீதான வரி மற்றும் பெட்ரோல்-டீசல் மீதான வரி மூலம் அரசுக்கு இந்த ஆண்டு ரூ.42 ஆயிரத்து 414 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வணிக வரிகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள தகவல் வருமாறு:-

சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் இல்லாமல், தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின் கீழ் (2006) மதுபானம், மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி மூலம் 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.42 ஆயிரத்து 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மாநில ஜி.எஸ்.டி. மூலம் ரூ.24 ஆயிரத்து 476 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ரூ.12 ஆயிரத்து 425 கோடியும் தமிழக அரசுக்கு வரி வருவாய் வந்துள்ளது. வணிக வரித்துறை 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.87 ஆயிரத்து 905 கோடி வரி வசூலித்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு ரூ.73 ஆயிரத்து 148 கோடி வரி வசூலிக்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் 20.17 சதவீதம் வரி விகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்