வீடு கட்டும் திட்டம் மூலம் மக்களை கடனாளி ஆக்கியது யார்? சட்டசபையில் காரசார விவாதம்
வீடு கட்டும் திட்டம் மூலம் மக்களை கடனாளி ஆக்கியது யார்? என்று சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
சென்னை,
சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார் (அணைக்கட்டு) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
நந்தகுமார் (தி.மு.க.):- தி.மு.க. ஆட்சியில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் மக்கள் பயனடைந்தார்கள். அதைபோன்று பசுமை வீடுகள் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தால் மக்கள் கடனாளியாகிவிட்டார்கள்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- தி.மு.க. கொண்டு வந்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தான் மக்கள் கடனாளி ஆகிவிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இதற்காக நிதி ஒதுக்கி அந்த திட்டத்தை ஜெயலலிதா முடித்துக்கொடுத்தார். பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- தி.மு.க. ஆட்சியில் வீடு கட்ட ரூ.75 ஆயிரம் தான் கொடுக்கப்பட்டது. இந்த பணத்தில் வீட்டை கட்டமுடியுமா? பயனாளிகள் அரசு பணம் மற்றும் சிறிய தொகையை போட்டு வீட்டை கட்டிக் கொள்கிறார்கள்.
நந்தக்குமார்:- இதற்கு பதிலாக அரசே மற்ற துறைகளைபோல, சாலைகள், பாலங்கள் அமைப்பதற்கு டெண்டர் விடுவதைபோல, பசுமை வீடுகள் கட்டுவதையும் டெண்டர்விட்டு கட்டிக்கொடுக்கலாமே?
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- அரசு கொடுக்கும் நிதியில் நிறைய பேர் வீடு கட்டுகிறார்கள். அதில் குறை எதுவும் இல்லை. மற்ற மாநிலங்களைவிட வீடு கட்ட தமிழக அரசு அதிக நிதியை கொடுக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் 15 லட்சம் பசுமை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது. நீங்கள் வெறும் ரூ.75 ஆயிரத்தை கொடுத்துவிட்டு இவ்வளவு பேச்சு பேசுகிறீர்கள்.
நந்தகுமார்:- குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கிறது. கேட்டால் நீங்கள் பற்றாக் குறை தான், பஞ்சம் இல்லை என்று சொல்வீர்கள். ஆனால் பஞ்சம் தான்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- குடிநீருக்காக அரசு பல்வேறு வகையில் பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மழைநீரை சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க 880 மில்லியன் லிட்டர் தண்ணீரை தினமும் பெறுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தப்போகிறோம்.
நந்தகுமார்:- மெரினா கடற்கரையில் நடப்பட்டிருந்த பெரிய மரங்கள் வாடிவிட்டது. நடப்பட்ட மரங்களில் எத்தனை உயிருடன் இருக்கிறது?
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- நடப்பட்ட மரங்கள் உள்ளாட்சி நிர்வாகத்தால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தவறான குற்றச்சாட்டை கூறக்கூடாது.
நந்தகுமார்:- பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சரிவர நடக்கவில்லை. பணிகள் பாதியிலேயே நிற்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. ஆட்சியிலே, சேலத்திலே பாதாள சாக்கடை திட்டத்தை எடுத்தீர்கள். பாதியிலே விட்டுவிட்டு போய்விட்டீர்கள். அந்த பாதாள சாக்கடைக்காக எல்லா வீதிகளிலுமே குழாய் களை பதிப்பதற்காக குழிதோண்டினார்கள். சாலையை அமைப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்காமலேயே போய்விட்டீர்கள். எல்லா சாலைகளுமே சிதைந்துபோய் கிடந்தது. இப்பொழுது இந்த அரசு தான் 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சேலத்திலே உங்களுடைய ஆட்சி காலத்திலே போடப்பட்ட அந்த பாதாள சாக்கடை திட்டத்தில் எல்லாம் இப்பொழுது நாங்கள் தான் சாலையை போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் அப்படித்தான். நீங்கள் செய்தது பாதாள சாக்கடை திட்டம் மட்டும் தான். ஆகவே, திட்டம் போடும் பொழுதே, அந்த திட்டத்தினால் பாதிக்கப்படுகின்ற சாலைகளை எல்லாம் சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாமலே நீங்கள் இருந்துவீட்டீர்கள்.
ஒரு திட்டம் போடும்போது சரியான முறையிலே திட்டம் போடவேண்டும் என்பதற்காக தான் இதை சுட்டிக்காட்டினேன். இதேபோல பல மாநகராட்சிகளில் உங்களுடைய ஆட்சி காலத்திலே பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கிவிட்டு, பாதியிலே விட்டுவிட்டு போய்விட்டார்கள். டெண்டர் எடுக்கிறார்கள். சப்-காண்ட்டிராக்ட் விட்டுவிட்டார்கள். சப்-காண்ட்ராக்ட் எல்லாம் சரியாக வேலை செய்யவில்லை. எல்லா ஆட்சியிலும் இப்படிப்பட்ட நிலைமை தான் இருக்கிறது. ஏன் என்றால் டெண்டர் விடும்போது தகுதியானவர் யாராக இருந்தாலும் டெண்டர் விட்டுதான் ஆகவேண்டும்.
பிறகு வேலை செய்வது அவருடைய நிலைமையை பொறுத்தது தான். சில நேரத்திலே, டெண்டர் எடுத்துவிடுவார்கள். நிதிநிலை சரியில்லை என்றால் பாதியிலே விட்டுவிடுகிறார்கள். அப்படித்தான் சேலம் மாநகராட்சியிலும் உங்களுடைய ஆட்சி காலத்திலே டெண்டர் எடுத்து பாதியிலே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.
நெடுஞ்சாலைத் துறையை பொறுத்தவரைக்கும் தரம் சோதனை செய்வதற்கு என்று தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஒரு பணி முடிகின்றபோது, தரம் சோதனை செய்துதான் அந்த பணிக்கு உண்டான ஒப்பந்தத் தொகை வழங்கப்படும். பொதுப்பணித் துறையிலும் கூட இதுவரைக்கும் தரம் சோதனை செய்வதற்கு நியமிக்கப்படவில்லை. இப்பொழுது பொதுப்பணித்துறையில் கட்டப்படுகின்ற பணியும் தரம் சோதனை செய்த பின்னர் தான் அதற்குண்டான தொகை வழங்க வேண்டும் என்று அறிவித்திருக்கின்றோம். அதில் ஏதாவது தவறு இருந்தால், நிச்சயமாக அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நந்தகுமார் (தி.மு.க.):- நீங்கள் வழங்கும் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் வீடு கட்டமுடியுமா? வீட்டை கட்டிமுடிக்க வேண்டும் என்பதற்காகவே கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்கி வீட்டை கட்டி, துன்பத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.