வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வார்டுகள் மறு வரையறை செய்யும் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.