கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி
சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்டத்தால் பயணிகள் திக்குமுக்காடினர்.
சென்னை,
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரெயில். குறைவான கட்டணத்தில் விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் மின்சார ரெயிலையே விரும்புகிறார்கள். குறிப்பாக அலுவலகம், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் மின்சாரரெயிலையே பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பராமரிப்பு பணி என்ற பெயரில் அடிக்கடி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது சமீபகாலமாக நடந்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. இதன்காரணமாக பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
அந்த வகையில் கோடம்பாக்கம் - தாம்பரம் மார்க்கத்தில் பராமரிப்பு பணி நேற்று நடைபெற்றது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு பகலில் செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வர வேண்டிய ரெயில்கள் தாம்பரத்திலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் செங்கல்பட்டுக்கு இயக்கப்பட்டன.
ஆனால் ரெயில் நிலையங்களிலோ, ரெயில்களிலோ இதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதேசமயம் மாற்று ஏற்பாடாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் கடற்கரையில் இருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது.
தாம்பரம் மார்க்கமாக செல்லும் பயணிகளுக்காக எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் மற்றொரு மின்சார ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. கடற்கரையில் இருந்து வந்த ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள், இந்த ரெயிலில் ஏறி தாம்பரம் சென்றனர். பயணிகள் நடைமேடையில் ஏறி பின்னர் 3-வது நடைமேடைக்கு சென்று தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயில்களில் ஏறும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.
தாம்பரத்தில் இருந்து வந்த சிறப்பு ரெயில் சுமார் 30 நிமிடங்களில் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் நடைமேடைகளிலும், மேம்பால படிக்கட்டுகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மறுமார்க்கத்தில் கடற்கரையில் இருந்து வரும் மின்சார ரெயில்கள் கோடம்பாக்கத்துக்கு வந்தன. பின்னர் அங்கு 10 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் கோடம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக இயக்கப்படும் ஒரு ரெயிலுக்கு, கடற்கரையில் இருந்து வரும் 2 ரெயில்களில் வரும் பயணிகள் ஏறும் நிலை ஏற்பட்டது. இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ரெயில்கள் இயக்கப்பட்டதால், கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தின் 3-வது நடைமேடை மற்றும் மேம்பால நடைபாதைகளில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
நடைமேடையில் இருந்த பயணிகள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மேம்பால நடைபாதைகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பல பயணிகள் ரெயில்களில் இருந்து தண்டவாளத்தில் இறங்கி, மற்றொரு நடைமேடைக்கு சென்றனர்.
மேலும் தாம்பரத்தில் இருந்து வந்த பயணிகள் மேம்பால நடைபாதையில் வெளியே செல்ல முடியாததால், தண்டவாளத்தில் இறங்கி சுவர்களை தாண்டி ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் அவல நிலை ஏற்பட்டது.
ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே தியாகராயநகரில் உள்ள துணிக்கடைகளில் ஆடித்தள்ளுபடி விற்பனை தொடங்கி உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும் மாம்பலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் காஞ்சீபுரம் அத்திவரதர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பலர் ரெயில் மூலம் திரும்பி வந்ததால் தாம்பரத்தில் இருந்து வந்த ரெயில்களில் அதிக கூட்டத்தை காணமுடிந்தது.
பல பயணிகள் கால் டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவைகளில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பலர் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்தினர். இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதுகுறித்து நங்கநல்லூரை சேர்ந்த ராஜேஸ்வரி கூறியதாவது:-
நான் மீனம்பாக்கத்தில் இருந்து எழும்பூர் செல்ல வந்தேன். ஆனால் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறித்து எந்த ஒரு முறையான அறிவிப்பும் இல்லை. இரவு நேரங்களில் பராமரிப்பு பணிகளை செய்தால் பயணிகளின் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் வராது. மேலும் இதுபோன்று ரெயில் சேவையில் மாற்றம் செய்தால் அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள ஒலிபெருக்கிகளில் அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களில் பயணிகள் ஏறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பல பயணிகள் தங்களது உடைமைகளை தவறவிட்டனர். கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தவறவிட்ட பொருட்களை தேட முடியாமல் புலம்பியவாறு நின்றனர்.
கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணி மேற்கொள்வதற்காக கூடுதலாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்றுமுன்தினம் பராமரிப்பு பணி குறித்தும், கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்த சுற்றறிக்கை ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் காலை முதலே ரெயில்வே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.