சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதியில் சிக்கினார் - விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் மாயமான சமூக ஆர்வலர் முகிலன் திருப்பதி ரெயில் நிலையத்தில் சிக்கினார். அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துவரப்பட்டார்.
ஸ்ரீகாளஹஸ்தி,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சமூக ஆர்வலர் வெளியிட்டார்.
அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது முகிலன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். குடும்பத்தினரும் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது முதலாவது நடைமேடையில் தாடியோடும், அழுக்கு சட்டையோடும் சந்தேகப்படும் படியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முகிலன் என்பது தெரியவந்தது. திருப்பதியில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்ததாக கூறிய முகிலன், திருப்பதியில் இருக்கும் விவரத்தை தனது மனைவியிடம் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.
முகிலன் திருப்பதி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் சிக்கிய விவரம் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. ஜாபர்சேட்டுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், தமிழக டி.ஜி.பி. திரிபாதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருப்பதி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருடன் டி.ஜி.பி. திரிபாதி பேசி, விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து திருப்பதி ரெயில்வே போலீசார் முகிலனை காட்பாடியில் தமிழக ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் நேற்று இரவு 11.50 மணி அளவில் சென்னை அழைத்துவரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.