கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.5304 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -எடப்பாடி பழனிசாமி

கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.5304 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-07-05 05:41 GMT
சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பணிநியமன ஆணைகளை வழங்கிய பின் முதலமைச்சர் பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.5304 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது கூறியதாவது:-

84 மருத்துவர்கள் பணி நியமனத்தின் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடமே இல்லாத நிலை ஏற்படும். மேலும் 8 ஆயிரம் பேருக்கான பணி நியமன ஆணை இந்த ஆண்டுக்குள் வழங்கப்பட உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்