தமிழகத்தில் 13 மாவட்ட மனநல மறு ஆய்வு மன்றங்கள் அமைப்பு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 13 மாவட்ட மனநல மறுஆய்வு மன்றங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மனநல மறுஆய்வு மன்றங்கள்
மனநல சேவைச் சட்டம் 2017 பிரிவு 73-ன்படி தமிழ்நாட்டில் 13 மாவட்ட மனநல மறுஆய்வு மன்றங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 13 இடங் களை தலைமையிடமாகக் கொண்டு, அதன் கீழ் கண்காணிப்பில் வரும் மாவட்டங்களும், மனநல மறுஆய்வு மன்றங்கள் அமைய உள்ள இடங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை- அரசு மனநல காப்பகம், சென்னை. திருவள்ளூர்- திருவள்ளூர், காஞ்சீபுரம்- அரசு மனநல காப்பகம், சென்னை. வேலூர்- வேலூர், திருவண்ணாமலை-வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. விழுப்புரம்- கடலூர், விழுப்புரம் - விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
திருநெல்வேலி-கோவை
சேலம்-சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி- அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. ஈரோடு- ஈரோடு, கரூர், நாமக் கல்-அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு. திருச்சி-திருச்சி, அரியலூர், பெரம்பலூர்- சி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி. ராமநாதபுரம்-புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்-அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ராமநாதபுரம்.
தேனி-மதுரை, தேனி, திண்டுக்கல்-தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. திருநெல்வேலி-திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி-திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. கோவை-கோவை, திருப்பூர், நீலகிரி-கோவை மருத்துவக்கல்லூரி. தஞ்சாவூர்-தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்- தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி. மதுரை-மதுரை, விருதுநகர்-மதுரை மருத்துவக்கல்லூரி.
விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்த மன்றங்களில் நிர்வாகிகள் நியமனங்கள் செய்வதற்கு தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. மன்றத்தின் தலைவர் பதவிக்கு மாவட்ட நீதிபதிகள் அல்லது நீதித்துறை பணியில் மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக உள்ள தகுதியுடையோர்கள் அல்லது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் விண்ணப்பிக்கலாம்.
மன்றத்தின் ஏனைய உறுப்பினர் கள் பதவிக்கு மனநல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் தலா ஒரு நியமனமும், மனநோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது முன்பு பாதிக்கப்பட்டவர், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை பராமரிப்பவர்கள் அல்லது பராமரிக்கும் நபர்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் மனநல பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதி களிடம் இருந்து தலா இரண்டு பேர் நியமனம் செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட நியமனத்துக்கான தகுதிகள், பதவிக்காலம் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்கள் www.tnhealth.org என்ற இணையதள முகவரியில் காணலாம். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ், ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தபால், விரைவு தபால் அல்லது நேரிலோ முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளச்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.