இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது -அமைச்சர் செங்கோட்டையன்

இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-02 08:17 GMT
சென்னை

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;-

இருமொழிக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும், அந்த முடிவிலேயே உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மூன்று மொழிக் கொள்கையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும்.

தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை  அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்