அரசியல் ரீதியான முடிவை நாளை அறிவிப்பேன்; இசக்கி சுப்பையா பேட்டி

அரசியல் ரீதியான முடிவை நாளை அறிவிப்பேன் என அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா பேட்டியளித்து உள்ளார்.

Update: 2019-07-01 15:25 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையே, தங்கதமிழ்செல்வனுக்கு டி.டி.வி.தினகரன் மீதும், அ.ம.மு.க. மீதும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அ.ம.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது.  ஆனால் அவர் கடந்த ஜூன் 28ந்தேதி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்த நிலையில், அ.ம.மு.க.வை சேர்ந்த இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.  இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை அரசியல் ரீதியான முடிவை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.  சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக இசக்கி சுப்பையா போட்டியிட்டார்.

மேலும் செய்திகள்